நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

163

நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, மகாதேவன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது வழக்கு தொடர்பான விபரங்களை பெற கணினி சேவை மையத்தை தொடங்கி வைத்தனர். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அவர்கள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வில் மாவட்ட நீதிபதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.