800 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ 2 கோடியே 63 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்..!

117

நெல்லையில்,அரசு சார்பில் 800 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ 2 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நெல்லையப்பர் காந்தியம்மன் கோயில் ஆனித் தேரோட்டத்தையொட்டி ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியில் அரசு துறை சார்பில் உள்ள திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான பொருட்காட்சியின் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார்.

மேலும் அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பாக 800 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ 2 கோடியே 63 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.