விவசாயம் மற்றும் கால்நடை மேம்பாடு குறித்து சிறப்பு கண்காட்சி

120

நெல்லையில் விவசாயம் மற்றும் கால்நடைகளின் வளர்ப்பை மேம்படுத்தும் விதமாகவும், வங்கிகளில் கடன் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் விவசாயம் மற்றும் கால்நடைகளின் மேம்பாடு குறித்து சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கால்நடைகளுக்கு தேவையான உணவுகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்கள் விவசாயிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் , பூச்சிகொல்லி மருந்துகள் வாங்குவது குறித்தும், கால்நடைகளுக்கு தேவையான சத்தான உணவுகளை வழங்குவது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்காட்சியினை கண்டு களித்தனர்.