நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு ..!

262

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை சுட்டிக் காட்டியுள்ளார்.
அதை ஏற்று கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நாளை மறுநாள் முதல் 125 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதன் மூலம் 14 ஆயிரத்து 6 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.