மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

129

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் தான் தன்னுடைய மகன் இறந்து விட்டார் என மூளைச்சாவு அடைந்த நெல்லை வாலிபரின் தாயார் வருத்தமுற்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள டானா பகுதியை சேர்ந்தவர் பழனிக்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாயார் சாரதா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 நபர்களுக்கு உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டன.உறுப்­புகள் மூலம் பிறர் பயன் பெற வேண்டும் என­ எண்­ணத்தில்தான் உறுப்பு தானத்திற்கு சம்­மதம் வழங்­கினேன் என பழனிக்குமாரின் தாயார் தெரிவித்தார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபர்களால் தான் தனது மகன் உயிரிழந்ததாகவும், இளைஞர்களின் வாழ்க்கையை பாதிக்கும் மதுவுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.