பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..!

342

கார் பருவ சாகுபடிக்காக நெல்லை பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை அம்பாசமுத்திரத்தில் உள்ள பாபநாசம் அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா தலைமையில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைக்கப்பட்டது. விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் 600 கன அடி அளவுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் 20729 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.