முதல்வர் உத்தரவின்படி கார் பருவத்திற்கான கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..!

247

நெல்லை கொடுமுடியாறு அணையில் இருந்து, கார் பருவத்திற்கான தண்ணீரை, சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை திறந்து விட்டார்.

வள்ளியூர் அருகே உள்ள, திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கொடுமுடியாறு அணை உள்ளது. இதனால் நான்குனேரி மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 5,781 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. சில தினங்களுக்கு முன்பு, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால்,கொடுமுடியாறு அணை நிரம்பியது. இதனையடுத்து, கார் பருவத்திற்காக தண்ணீரை திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அணையை திறந்து விட முதல்வர் உத்தரவிட்டதால், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தண்ணீரை திறந்து விட்டார்.