12ம் தேதி ஆஜராகா விட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என எஸ்.வி. சேகருக்கு நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை..!

302

12ம் தேதி ஆஜராகா விட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று, எஸ்.வி சேகருக்கு நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவரது நண்பர் திருமலை சடகோபன் பதிவிட்ட தவறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து முகநூல் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை எஸ்.வி. சேகர் நீக்கினார். இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நெல்லை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் எஸ்.வி. சேகர் ஆஜராகா விட்டால், பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.