நெல்லையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

200

நெல்லையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நான்கு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.