நெல்லையில் முதன்முறையாக அம்மா கால் டாக்ஸி திட்டம் தொடங்க அக்கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

264

நெல்லையில் முதன்முறையாக அம்மா கால் டாக்ஸி திட்டம் தொடங்க அக்கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் அதிமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட அதிமுக அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலகண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அம்மா பெயரில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா சிமெண்ட் போன்றவை இருப்பதுபோல அம்மா கால் டாக்ஸி உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மற்ற கால் டாக்ஸியில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட மிகக் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்