புது வருடப் பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

176

புது வருடப் பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோயில். புத்தாண்டு அன்று சுவாமியை தரிசனம் செய்வதற்காக மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், வேல்குத்தியும் வழிபாடு நடத்துவதற்காக திருச்செந்தூரை பாத யாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர். இதனால், தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலைகளில் கூட்டம் அலைமோதுகிறது.