நெல்லையில் அன்னை வேளாங்கன்னி மாதா கோவில் திருவிழாவின்போது உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

308

நெல்லையில் அன்னை வேளாங்கன்னி மாதா கோவில் திருவிழாவின்போது உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம், பரதர் உவரி கிராமத்தில் நடைபெற்ற சப்பர பவனியின்போது, உயர்மின் அழுத்த கம்பியின் மீது சப்பரம் உரசியதில் 4 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

துயர சம்பவத்தில் உயிரிழந்த ராஜ், க்ளைவ், ராஜா, நிமோ ஆகியோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள 24 பேருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.