நெல்லை அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை, முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

262

நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே திருவேங்கடம் செல்லும் சாலையில், புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள முட்புதரில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சென்று பார்த்த அப்பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்தனர். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. பின்னர் குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த சங்கரன்கோயில் போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.