நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா..!

353

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிலையில், நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொடி மரத்தில், வேதமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர் . இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இதனையடுத்து, ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்டம் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.