துப்பரவு தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டம்..!

136

திருநெல்வேலியில் பேரூராட்சியில் தினக்கூலியாக பணிபுரியும் துப்பரவு தொழிலாளர்கள் முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுரண்டை பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் 70க்கும் மேற்பட்ட துப்பரவு தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். மருத்துவ உதவிகள், சீருடைகள், உபகரணங்கள், முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அலுவலர்களை கண்டித்தும் முறையான ஊதியம் வழங்க கோரியும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.