மதுக்கடைகளை மூட கோரி, கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட 12ஆம் வகுப்பு மாணவன்.

760

டாஸ்மாக் கடைகளை மூடுமாறு பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, சங்கரன்கோவிலை சேர்ந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, சங்கரன்கோவிலை அடுத்துள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. கூலித்தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரிடம் சண்டையிட்டு விட்டை வீட்டை விட்டு வெளியேறிய அவரது மகன் தினேஷ், இன்று காலை வண்ணார்பேட்டையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது பையை சோதனையிட்டதில், தினேஷிடம் நீட் தேர்வுக்கான அனுமதி சீட்டும், தற்கொலை கடிதமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில், நான் இறந்த பிறகாவது எனது தந்தை குடியை நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரும், முதல்வரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் எனவும் அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.