72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நெல்லை ரயில் நிலையத்தில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் சதிச்செயலில் ஈடுபடலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, நெல்லை ரயில் நிலையத்தில் தமிழக காவல்துறையினருடன் இணைந்து ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள், பார்சல் பொருட்கள் மற்றும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாயால் சோதனை செய்யப்படுகின்றன.

பயணிகள் மற்றும் அவர்களுடைய உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்த பின்னரே, ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நெல்லை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும், சுதந்திர தின விழா முடிவடையும் வரை சோதனைகள் நடைபெறும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.