சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நவ.1ல் ஓய்வுபெற போவதாக நெஹரா அறிவிப்பு!

197

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் நெஹரா, 1999ம் ஆண்டு முகமது அசாருதீனின் கேப்டன்ஷிப்பில் அறிமுகம் ஆனார். 17 டெஸ்டில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நவம்பர் 1ஆம் தேதி நடக்கிறது. சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி விட்டு ஓய்வு பெற இருப்பதாக நெஹரா அறிவித்துள்ளார்.