நீட் தேர்வு விவகாரத்தில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன் – தமாக தலைவர்!

432

இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 49 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டுமென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த வாசன், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.