நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

355

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் பொது நுழைவுத்தேர்வு நாளை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 11லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இதற்காக 103 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தேர்வு நடைபெறும். காலை ஏழரை மணிக்கு தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். 9.45 மணி வரை தேர்வுக்கான அனுமதி அட்டை பரிசோதிக்கப்படும். அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனுமதி அட்டையின் 2வது பக்கத்தில் ஓட்ட வேண்டிய அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். நீலநிறம் அல்லது கருப்பு நிற பால்பாயின்ட் பேனா மூலமே தேர்வு எழுத வேண்டும். ஷூ, முழுக்கை சட்டை, டீ-சர்ட், கைக்கடிகாரம், செயின், ஆபரணங்கள், ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது. முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.