ஒரு மாதத்தில் பெட்ரோல்-ரூ.3.38, டீசல்-ரூ.1.66 அதிகரிப்பு | பொதுமக்கள் அதிர்ச்சி..!

428

ஒருமாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 38 காசுகள் உயர்ந்து இருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறைக்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 38 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 73 காசுகளுககு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 66 காசுகள் அதிகரித்து 61 ரூபாய் 46 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.