நீட் தேர்விற்கு தற்காலிக விலக்கு அளிக்கும் விவகாரம் மத்திய அரசு முடிவுக்கு வரவேற்பு-பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்

475

நீட் தேர்விற்கு, தற்காலிக விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்து இருப்பதை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சு வார்த்தை எதுவும் நடைபெற வில்லை என்று தெரிவித்தார். விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக பாண்டியராஜன் குறிப்பிட்டார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு தற்காலிக விலக்கு அளிக்க மத்திய அரசு முன் வந்து இருப்பதாக கூறப்படுவதை வரவேற்பதாக கூறிய அவர், நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.