நீட் தேர்வின் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது – திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

284

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்ததாக திருமாவளவன் தெரிவித்தார். நீட் தேர்வின் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டிய திருமாவளவன், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக கூறினார்