நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால், மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

338

நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால், மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாணவி அனிதாவின் மறைவுக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் தடையை மீறி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, மெரினாவில் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது போன்று, மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதால், மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை நுழைவாயில்கள் அடைக்கப்பட்டு இருப்பதால், மெரினா கடற்கரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில், மாணவர்கள் போராட்டம் வலுத்து வருவதால், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே, போலீசாருக்கு விடுமுறை தர வேண்டும் என எஸ்.பி. மற்றும் கமிஷனருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.