நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு புதுச்சேரி அரசுக்கு அனுமதி

262

புதுச்சேரியில் விதிகளை மீறி நிகர்நிலை பல்கலைகழகம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 770 மாணவ, மாணவியரை 2 வாரங்களில் வெளியேற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், மாநில இட ஒதுக்கீட்டில் சேருவதற்கு புதுச்சேரி அரசு அனுமதி பெற்றிருந்தது.
இதனால் அரசு இட ஒதுக்கீடாக பெறப்பட்ட 283 இடங்கள் மட்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டன.
தனியார் நிகர் நிலை பல்கலை மற்றும் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட வேண்டிய 770 இடங்களும் மருத்துவ கவுன்சில் விதிமுறையையும் மீறி நிரப்பப்பட்டன.
இது தொடர்பாக புதுச்சேரி மாணவர் பெற்றோர் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சில் விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையில் விதிமுறை மீறி சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் 770 பேர், இரண்டு வார காலத்திற்குள் வெளியேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.