நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அதிமுக அரசு தவறி விட்டது என்று திமுக செயல்தலைவர்…

210

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அதிமுக அரசு தவறி விட்டது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் உள்ளதை பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார். இதற்குப் பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீட் தேர்வுக் குறித்து தொடர்ந்து பேச திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் தேர்தலை முன்வைத்து, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறி விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்
இதேகருத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.