நீட் தேர்வில் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

501

நீட் தேர்வில் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் கேட்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறியுள்ளார். அதிலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கான வினாத்தாளில் உருது மொழியும் இடம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநில பாடத்திட்டமான 11 மற்றும் 12ம் வகுப்பு புத்தகத்திலிருந்தும் கேள்விகள் இடம்பெறும் என்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.