நீட் தேர்வு இன்றி மருத்துவ படிப்பை தமிழக மாணவர்கள் பழைய முறையிலேயே தொடர வழி வகை செய்யும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

314

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்தது. எனவே நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதன்மூலம், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். சட்ட முன்வடிவை தாக்கல் செய்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய சட்டம் அமலுக்கு வந்தால், நீட் தேர்வை எழுத வேண்டிய அவசியம் தமிழக மாணவர்களுக்கு இருக்காது என்று தெரிவித்தார்.