உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்ட காரணத்தால், தமிழகம் நீட் தேர்வை சந்திக்க நேரிட்டதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு மத்திய காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கிய போது கூட்டணியில் திமுக அங்கம் வகித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

மாணவி பிரதிபா தற்கொலை குறித்து சட்டப்பேரவையில் வருத்தம் தெரிவித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டத்துறையின் ஒப்புதலை பெற்ற போதும், உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வை எதிர்கொள்ள நேரிட்டதாக தெரிவித்தார். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, நீட் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், அப்போது திமுக கூட்டணியில் இருந்ததாகவும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். மேட்டூரில் தொழில் வளர்ச்சி அதிகமாக இருப்பதால், புதிதாக 4 துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.