தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்கள் அவதி..!

1445

நீட் நுழைவுத் தேர்வினை எழுத தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். வெளி மாநிலத்துக்கு சென்று தேர்வினை எதிர்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வினை 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் இந்த தேர்வை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக மதுரையில் இருந்து எர்ணாகுளத்திற்கு ரெயில் மூலம் மாணவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
கன்னியாகுமரி, நெல்லை, கோவில்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா சென்றனர். தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிதியுவி வழங்கினாலும், வெளி மாநிலத்தில் சென்று தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.