நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு துணை நிற்போம்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

232

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் நடைபெறும் அனைத்துப் போராட்டத்திற்கும் தங்கள் கட்சி துணை நிற்கும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பாக தி.மு.க. தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று கூறினார்.