நிகழாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டப்படியே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்..!

366

நிகழாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டப்படியே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு, நீட் தேர்வினை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இதனிடையே, நிகழாண்டு நீட் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டின் பாடத் திட்டத்தின்படியே நிகழாண்டிலும் நீட் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.