2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

154

இதுதொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அடுத்த கல்வியாண்டு முதல், நீட் எனப்படும், மருத்துவ படிப்பிற்கான, தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு, எட்டு மொழிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி, ஆங்கிலம், குஜராத், மராட்டி, பெங்காலி, அஸ்ஸாமிய, தெலுங்கு, மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.

எந்த மொழியில் தேர்வை எழுதினாலும், நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், அகில இந்திய அளவிலான இட ஒதுக்கீடு மற்றும் மாநில அளவிலான இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவக்கல்வியில் ஒளிவு மறைவற்ற தன்மையை ஏற்படுத்துவது மற்றும் முறை கேடுகளை நீக்குவது என்ற உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.