நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது..!

1348

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.மருத்துவ படிப்புக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு, மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.இதன்படி, மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும் எனவும், பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷூ, பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது என்றும், குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு மட்டும் அணிந்து வர வேண்டும்.தேர்வு மையத்திற்குள் தொலைத்தொடர்பு சாதனங்களை எடுத்து வரக்கூடாது என தெரிவித்துள்ள சிபிஎஸ்இ நிர்வாகம்,ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதித்துள்ளது.கடந்த ஆண்டு ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.