நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு..!

223

தமிழில் நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கட்சி சார்பில் தோழா் டி.கே. ரங்கராஜன் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த வழக்கில் நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தத் தீா்ப்பை எதிா்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்யாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

நீட் தோ்வில் தமிழில் தோ்வெழுதிய மாணவா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுதான் சரியான பரிகாரம் என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். நீட் தோ்வு வினாத்தாள் குளறுபடி தொடா்பான வழக்கில் மிகச் சரியான தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக திரவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.