நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள் !

328

மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வு, மே மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான, ஆன் லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல், 1-ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீட் தேர்வு எழுத, விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, கால அவகாசத்தை ஏப்ரல் 5-ம் தேதிவரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நீட்டிக்கப்பட்ட கால அவகாசம், இன்றுடன் முடிவடைகிறது. இன்று நள்ளிரவு, 12 மணியுடன் ஆன் லைன் பதிவுகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.