தமிழகம் முழுவதும் நாளை முதல் நீட் பயிற்சி தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்

145

தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்பட தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிததுள்ளார்.

சென்னை அடையாறில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகம் முழுவதும் நாளை 412 நீட் மையங்கள் தொடங்கப்படும் என்றும், இதற்காக 3 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.