நீட் கேள்வித்தாளை தயாரிப்பதற்கு தமிழக அரசு எந்தவொரு மொழிப் பெயர்ப்பாளர்களையும் பரிந்துரைக்கவில்லை – அமைச்சர் பாண்டியராஜன்

309

நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளுக்கும், தமிழக மொழிப்பெயர்ப்புத் துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசு தான் காரணம் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், நீட் கேள்வித்தாளை தயாரிப்பதற்கு தமிழக அரசு எந்தவொரு மொழிப் பெயர்ப்பாளர்களையும் பரிந்துரைக்கவில்லை என்றார். சிபிஎஸ்இ வல்லுநர்களை வைத்தே வினாத்தாள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என கூறிய அவர், இந்த குளறுபடிகளுக்கு முழு பொறுப்பு சிபிஎஸ்இ தான் என தெரிவித்தார். இதற்கும் தமிழக மொழிப் பெயர்ப்புத்துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறினார்.