நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

358

நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக சி.பி.எஸ்.இ. தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

நீட் தேர்வில் பிழையாக கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்களை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. புதிய மருத்துவ தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அதன்படி கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவையடுத்து தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.