நீட் தமிழ் வினாத்தாளில் உள்ள பிழைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் சி.பி.எஸ்.இ. பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

359

நீட் தமிழ் வினாத்தாளில் உள்ள பிழைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் சி.பி.எஸ்.இ. பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் பிழையான 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதிகள், நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி தொடர்பாக சி.பி.எஸ்.இ. பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் மத்திய-மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.