நீட் தேர்வை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் – முதலமைச்சர் நாராயணசாமி

159

நீட் தேர்விலிருந்து 5 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை மத்திய அரசு உணர்ந்து நீட் தேர்வை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். 5 ஆண்டுகள் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறிய நாராயணசாமி, மீண்டும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் புதுச்சேரி அரசு சார்பில் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.