நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்..!

218

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் திமுக மாணவர் அணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி தெற்கு மாநில திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அமைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான சிவா தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, அமுதாகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக-வினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.