நீட் தேர்வில் 691 மதிப்பெண் முதல் மதிப்பெண்ணாக அறிவிப்பு..!

236

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான நீட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வு கடந்த மே 6 ஆம் தேதி நடைபெற்றது. இதனை நாடு முழுவதும் 13 லட்சம் பேரும், தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேரும் எழுதினர். தேர்வுக்கான விடைகள் பட்டியல் சி.பி.எஸ்.இ. இணைய தளத்தில் கடந்த 25 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வில் 691 மதிப்பெண் முதல் மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.