யானைகள் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு சீல்..!

431

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, 27 ரிசார்ட்களுக்கு நீலகிரி மாவட்ட வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இதனைக் கண்டித்து, மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 39 ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் 27 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 12 ரிசார்ட்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் சீல் வைக்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.