நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக…

125

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்து சென்றனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். நெடுந்தீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். மேலும், மீனவர்களின் படகு மீது கப்பலை மோதச் செய்து மூழ்கடித்தனர். இதனையடுத்து தமிழக மீனவர்கள் 4 பேரையும் அவர்களின் ஒரு விசைப்படகுடன் சிறைப்பிடித்து சென்றனர். கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் காங்கேசம் துறைமுக கடற்படைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.