கோவை பேரிடர் பயிற்சிக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்

763

கோவை கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் பயிற்சிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில், கோவை கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியின்போது, மாணவி இறந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கோவை கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் பயிற்சிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது. மேலும், கோவை கல்லூரியில் பயிற்சி அளித்தவர் தங்களிடம் முறையான பயிற்சி பெற்றவர் இல்லை என்றும் பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.