மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, இனிவரும் தேர்தல்களில் ஒப்புகைச்சீட்டு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.

423

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, இனிவரும் தேர்தல்களில் ஒப்புகைச்சீட்டு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தயாரிப்பின்போதே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்ய முடியாது என்று கூறிய அவர், வாக்குப்பதிவுக்கு கொண்டு செல்லும் வழியிலோ, பாதுகாப்பாக வைத்திருக்கும் இடத்திலோ எந்த மாற்றங்களும் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
5 மாநில தேர்தலுக்கு பின்னரே, இவிஎம் முறைகேடு குறித்த புகார்கள் வந்துள்ளதாக கூறிய நஜீம் ஜைதி, எந்த கட்சியும் இவிஎம் முறைகேடு தொடர்பாக, இதுவரை ஆதாரங்களுடன் புகார் அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, இனி வரும் தேர்தல்களில் இவிஎம்-களுடன் ஒப்புகைக்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, இவிஎம்-களில் முறைகேடு என்பதை அடுத்த மாதம் 3 ஆம் தேதி நிரூபிக்கலாம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு நஜீம் ஜைதி அழைப்பு விடுத்துள்ளார்.