அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.

337

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து கிடப்பதால், கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்தநிலையில், அவர் பாரதிய ஜனதாவில் இன்று இணைந்தார்.
இதேபோன்று, வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், உள்ளிட்டோரும் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.