சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு நடிகை நயன்தாரா நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

412

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பித்தாலும் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். கருப்பு நிற உடை அணிந்து வந்த அவர், துணியால் மூடியபடி கலந்து கொண்டார்.