சுக்மா பகுதியில் பதுங்கி இருந்த 20 நக்சலைட்கள் கைது!

358

சத்தீஸ்கரில் பதுங்கியிருந்த 20 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சுக்மா மாவட்டத்தில் மாவட்ட போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிந்தகுபா மற்றும் சிந்தால்னர் பகுதிகளில் பதுங்கி இருந்த நக்சலைட்கள், போலீசார் மீது தாக்கல் நடத்த முயன்றனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் சுற்று வளைத்து 20 நக்சலைட்களை கைது செய்தனர். இவர்கள், போலீசாரை தாக்கியது உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் பிஜாபூர் காட்டு பகுதியில் சுற்றித்திரிந்த நக்சலைட்கள் மூன்று பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றது குறிப்பிட்டத்தக்கது.